பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி., அபாரம்
பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி., அபாரம்
ADDED : செப் 02, 2026 03:56 AM

சண்டிகர்: பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., இரண்டாவது முறையாக தலைவர் பதவியை வென்றுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.
இதில், பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.,யை சேர்ந்த அங்கித்பிதான் 3149 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். பஞ்சாப் பல்கலைக்கழக வரலாற்றில் ஏ.பி.வி.பி., அமைப்பு தொடர்ந்து இரண்டாவது முறை தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளது இதுவே முதல்முறை.
ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.எஸ்.ஏ.பி.,யி-ன் அடில் பிரார் இவரை விட 512 ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளார். இத்தேர்தலில் சிரோமணி அகாலி தளத்தின் மாணவர் அமைப்பு ஆதரவு அளித்தது. இது வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் ரீதியாக புதிய கூட்டணி குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள கரப்பான் பூச்சி கட்சியினர் ஆம் ஆத்மி ஆதரவுடன் இயங்கி வந்தாலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியினருக்கும், கரப்பான் பூச்சி இயக்கத்தினருக்கும் தற்போது செல்வாக்கு இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
