ADDED : செப் 02, 2026 03:44 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மது போதையில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், திருப்பட்டினம் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர். மேல்வாஞ்சூர் மாதா கோவில் தெருவில் வாலிபர் ஒருவர் போதையில் நின்று கொண்டு, அவ்வழியே செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை, பிடித்து விசாரித்தனர். அவர், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பூதங்குடி பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம், 29, என்பது தெரியவந்தது. அவர் மீது திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
