தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை மையம் அறிவிப்பு

2


ADDED : அக் 18, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 18, 2026 07:26 PM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, தேனி போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.

தமிழக அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீட்பு பணிகளுக்காக, வேளச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழு தயார் நிலையில் உள்ளது. மேலும், 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் சென்னை விரைந்துள்ளன. வெள்ளம் தேங்கிய இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விழுப்புரத்தில் இருந்து 1000 டிராக்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

தற்போது, சென்னைக்கு இன்று விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றுள்ளது.

அறிக்கை; சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து விட்டது. சென்னைக்கு கணிக்கப்பட்ட மழைக்கான வாய்ப்பு இல்லை. ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது. சென்னையில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும். இவ்வாறு கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us