தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்தில் உள்ள போலி நுால்களை உடனே அகற்றுங்கள்: ஆசிரியர் சங்கம் கொதிப்பு

ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்தில் உள்ள போலி நுால்களை உடனே அகற்றுங்கள்: ஆசிரியர் சங்கம் கொதிப்பு

ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்தில் உள்ள போலி நுால்களை உடனே அகற்றுங்கள்: ஆசிரியர் சங்கம் கொதிப்பு

36


UPDATED : நவ 09, 2026 06:36 AM

ADDED : நவ 09, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 06:36 AM ADDED : நவ 09, 2026 06:35 AM

36


36
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: 'கோவை, ஈ.வெ.ரா., நுாலக அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று திரிபுகள் மற்றும் பிழைகள் நிறைந்த போலி நுால்களை உடனடியாக அகற்ற வேண்டும்' என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க, மாநில தலைவர் மலைக்கொழுந்தன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து, அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் உள்ள, ஈ.வெ.ரா., பெயரிலான நுாலகத்துக்கு நுால்கள் வாங்கியதில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதை, மற்ற அரசு துறைகளில் நடக்கும் வழக்கமான ஊழல்களை போல எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. ஏனென்றால், இந்நுாலகத்திற்கு வாங்கிய புத்தகங்களில் முழுக்க முழுக்க தவறான தகவல்களும், வரலாற்று திரிபுகளும் மலிந்து கிடக்கின்றன.

இத்தகைய தரம் குறைந்த நுால்களை உண்மையென நம்பி படித்து, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் இதைவிட பெருங்கேட்டை எவராலும் செய்துவிட முடியாது. தமிழக அரசு, தாமதமின்றி உடனடியாக தலையிட்டு, உயர்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, ஈ.வெ.ரா., நுாலக அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள போலி நுால்களை உடனடியாக அடையாளம் கண்டு, அப்புறப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us