பட்டா திருத்தத்திற்கு ரூ.4,000 லஞ்சம்; வருவாய் ஆய்வாளர் கைது
பட்டா திருத்தத்திற்கு ரூ.4,000 லஞ்சம்; வருவாய் ஆய்வாளர் கைது
ADDED : அக் 06, 2026 07:38 AM

நமது நிருபர்
சிட்லப்பாக்கத்தில், பட்டா பெயர் மாற்றத் திற்கு, 4,000 ரூபாய் லஞ் சம் வாங்கிய பிரசாந்த், என்ற வருவாய் ஆய்வா ளரை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர், தன் நிலத்தை அளவீடு செய்து, பட்டாவில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ள தந்தையின் பெயரை திருத்தம் செய்யக்கோரி, தாம்பரம் வட்டாச்சி யர் அலுவலகத்தில், மனு அளித்திருந்தார்.
அந்த மனுவை பரிசீலித்து, மேல் நடவடிக்கைக்காக பரிந்துரை செய்வதற்கு, சிட்லப்பாக்கம் வரு வாய் ஆய்வாளரான பிரசாந்த் என்பவர், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும் பாத மனோஜ்குமார், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 4,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு களை, மனோஜ்குமாரிடம் இருந்து வருவாய் ஆய்வாளர் பிரசாந்த், நேற்று வாங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு துறை போலீசார், பிரசாந்தை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். அவரிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
