தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/உண்ணாவிரதம் இருந்த செவிலியர்கள் கைது

உண்ணாவிரதம் இருந்த செவிலியர்கள் கைது

உண்ணாவிரதம் இருந்த செவிலியர்கள் கைது

2


ADDED : அக் 06, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : அக் 06, 2026 07:09 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தினர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் செவிலியர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அவர் மேடையில் இருக்கும்போதே, 'தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

இன்றைய முதல்வர் விஜய், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்' என, செவிலியர்கள் கோஷமிட்டனர். இது குறித்து, சங்கத்தின் தலைவர் சுந்தரி பேசுகையில், ''த.வெ.க., தேர்தல் வாக்குறுதி அளித்தப்படி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

முன்னாள் அமைச்சர் மழுப்பல்

தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜிடம், 'தி.மு.க., ஆட்சியிலும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை 'என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''நான் கட்சி சார்பில், போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அரசமைப்பு சட்ட பாதுகாப்பு அமைப்பு சார்பில் பங்கேற்றேன். உரிமைக்காக குரல் கொடுப்பதற்காக வந்துள்ளேன்,'' எனக்கூறி அங்கிருந்து நழுவினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us