தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/துணை நடிகர் விபத்து வழக்கில் திருப்பம்; சிக்கினார் பெண் இன்ஸ்பெக்டர்

துணை நடிகர் விபத்து வழக்கில் திருப்பம்; சிக்கினார் பெண் இன்ஸ்பெக்டர்

துணை நடிகர் விபத்து வழக்கில் திருப்பம்; சிக்கினார் பெண் இன்ஸ்பெக்டர்

3


ADDED : அக் 06, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 07:05 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: துணை நடிகர் சரண்ராஜ், 29, உயிரிழந்த வழக்கில், கிண்டி போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் அகிலா, உண்மையை மறைத்து தவறான அறிக்கை தாக்கல் செய்ததற்காக, அவரை மூன்று ஆண்டுகள் புலனாய்வு பணியில் இருந்து விலக்கி, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் துணை நடிகர் சரண்ராஜ், 29. 'அசுரன், வட சென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 2023 ஜூன் 7ம் தேதி, தன் இருசக்கர வாகனத்தில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்ற போது, கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரண்ராஜின் நண்பர்கள் பழனியப்பன், துரைராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், வழக்கை மறு விசாரணை செய்யக்கோரி, சரண்ராஜின் தாய் மாரியம்மாள், சென்னை, 16வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், விபத்து தொடர்பான, 'சிசிடிவி' காட்சிகள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒன்றையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சி.சஞ்சய் பாபா பிறப்பித்த உத்தரவு: 'சிசிடிவி' காட்சியை பார்த்த போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கார் வேகமாக வந்து, சரண்ராஜின் வாகனத்தின் மீது மோதியது தெரியவருகிறது.

விபத்து நள்ளிரவு நடந்ததால், நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என, போலீஸ் கூறியுள்ளது. ஆனால், கண்காணிப்பு கேமரா காட்சியில், அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இருப்பது தெரிகிறது. இருப்பினும் அவரை சாட்சியாக விசாரணை அதிகாரி சேர்க்கவில்லை. விபத்தை ஏற்படுத்திய கார், முதலில் வேறு காரில் மோதி, பின் இரு சக்கர வாகனத்தில் மோதியதாக, போலீசார் அறிக்கையில் கூறியிருப்பது, 'சிசிடிவி' காட்சியுடன் ஒத்துப் போகவில்லை.

மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை, 122 நாட்களுக்கு பின் ஆய்விற்கு அனுப்பி உள்ளனர். அதன்படி, விசாரணை அதிகாரி வழக்கின் உண்மையான தகவல்களை மறைத்து, சம்பவத்தை வெறும் சாலை விபத்தாக சித்தரித்துள்ளார். அதாவது, சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றவும், அவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், அவர் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார்.

எனவே, கிண்டி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அகிலா மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உண்மையை மறைத்து, தவறான அறிக்கை தாக்கல் செய்ததற்காக, மூன்று ஆண்டுகள் புலனாய்வு விசாரணையில் இருந்து, அவரை விலக்கி வைக்க வேண்டும். மேலும், புதிய விசாரணை அதிகாரியை நியமித்து, வழக்கை, 60 நாட்களுக்குள் மறு விசாரணையை செய்து, துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us