தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மும்முனை மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்; இருவர் கைது

மும்முனை மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்; இருவர் கைது

மும்முனை மின் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்; இருவர் கைது

7


ADDED : அக் 14, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

7

ADDED : அக் 14, 2026 03:42 PM


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை, கிணத்துக்கடவு அடுத்த பட்டணம் கிராமத்தில் மும்முனை மின்சாரம் பெற விண்ணப்பித்த விவசாயியிடம், 7,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கேங்மேன் நவீன் குமார் கைது செய்யப்பட்டனர்.

கோவை, கிணத்துக்கடவு அடுத்த பட்டணம் கிராமத்தில் மும்முனை மின்சாரம் பெற விவசாயி ஒருவர் விண்ணபித்தார். புதிய மின் இணைப்பு வழங்க, தனக்கு, 7,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் விவசாயி இடம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விருப்பமில்லாத விவசாயி, ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறிவுரைப்படி, விவசாயி பணத்தை கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகனிடம் வழங்கினார். மறைந்திருந்த போலீசார், ரூபாய் லஞ்சம் பெற்ற கமர்சியல் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் கேங்மேன் நவீன் குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us