தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சமூக சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்; பிரதமர் மோடி பாராட்டு

சமூக சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்; பிரதமர் மோடி பாராட்டு

சமூக சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆர்எஸ்எஸ்; பிரதமர் மோடி பாராட்டு

8


ADDED : அக் 20, 2026 12:03 PM

Follow on GoogleFavourite on Google

8

ADDED : அக் 20, 2026 12:03 PM


8
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

1925ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று துவக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம், தேசக் கட்டமைப்பு, சமூக சேவைக்காக 100 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நிறுவன தினத்தை முன்னிட்டு, எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அயராத உழைப்பு, சேவை மனப்பான்மையின் மூலம் அமைப்பை வளர்த்த சிறந்த ஆளுமைகள் அனைவருக்கும் எனது மரியாதையைச் சமர்ப்பிக்கிறேன்.

சேவை, சமூக அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, ஒரு மகத்தான நூற்றாண்டைப் பூர்த்தி செய்துள்ளது.

அர்ப்பணிப்பு, கடமை உணர்வு மற்றும் 'தேசமே முதன்மை' என்ற கொள்கையைக் கொண்ட எண்ணற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னார்வலர்கள், சமூக மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்துள்ளனர்.

வரும் காலங்களிலும் தேசத்தை இன்னும் வலிமையாகவும், உறுதியுடனும் மாற்றும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டு!

நாக்பூரில் நடந்த நூற்றாண்டு ஆண்டு விஜயதசமி விழாவில் பேசிய மோகன் பாகவத்தை பிரதமர் மோடி பாராட்டினார். ''மோகன் பகவத் மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார். தேசிய முன்னேற்றம், சமூக ஒற்றுமை, தன்னம்பிக்கையின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமாக விளங்கும் சேவை உள்ளிட்டவற்றின் மீதான அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்'' என மோடி பாராாட்டியுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us