மீண்டும் அதே அலுவலகம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
மீண்டும் அதே அலுவலகம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
ADDED : ஜூலை 07, 2026 03:27 PM

திருப்பூர்: திருப்பூர் அருகே பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் பெற்றதாக வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருப்பூர் அருகே தொட்டிபாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக நாசர் அப்துல் ரகுமான்(40) என்பவர் உள்ளார்.
இன்று பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ.5 ஆயிரத்தை நாசர் அப்துல் ரகுமான் லஞ்சமாக பெற்றுள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் நாசர் அப்துல் ரகுமானை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
கடந்த மாதம், இதே அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்க, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அதே அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய இன்னொரு விஏஓ கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
