ADDED : டிச 05, 2025 06:50 PM

சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அதே கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ளது.பாஜ உடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்ற கட்சிகளை சேர்க்க முயற்சி செய்து வருகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. நடிகர் தவெகவும் இந்த தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க தயார் என விஜய் அறிவித்தாலும் எந்த கட்சியும் அவருடன் கூட்டணி அமைக்கவில்லை.
இந்தத் தேர்தலை தனித்தே சந்திக்கப் போவதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண்களையும் களமிறக்கப் போவதாக சீமான் அறிவித்துள்ளார்.மேலும் 234 வேட்பாளர்களையும் ஒரே நேரத்தில் அறிமுகபடுத்தும் மாநாடு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடக்கும் எனவும் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், முதற்கட்டமாக 100 பெயர் கொண்ட வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக சீமான் அறிவித்துள்ளார். இப்பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை எனவும், இடும்பவனம் கார்த்திக், இயக்குநர் களஞ்சியம், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

