ADDED : செப் 08, 2025 08:13 AM

கோவை: மன அமைதிக்காக ராமரை தரிசிக்க ஹரித்வார் செல்வதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் வலியுறுத்தினார். மேலும், இந்த கோரிக்கையை நிறைவேற்ற இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.
இதையடுத்து, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து இபிஎஸ் அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது; அதிமுக ஒன்றிணைய வேண்டும். ராமரை வழிபட ஹரித்வார் செல்கிறேன். நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை. நான் கலங்கி போய் விடக் கூடாது என்பதற்காக ஆதரவாளர்கள் என்னை சந்தித்து செல்கின்றனர். நீங்கள் சொன்னது நியாயமான கோரிக்கை தான் எனக் கூறினார்கள், இவ்வாறு தெரிவித்தார்.