இந்தியாவில் 4,000 யானைகள் குறைவு; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் 4,000 யானைகள் குறைவு; கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்
ADDED : அக் 21, 2025 05:14 AM

கம்பம்: இந்தியாவில் 2017க்கு பின் 4,000 யானைகள் குறைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுதும் 2017ல், 27,312 யானைகள் இருந்துள்ளது. 2021- 2025 எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 22,446 யானைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதன்படி 4,065 யானைகள் குறைந்துள்ளன.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 11,934 யானைகள் உள்ளன. கர்நாடகாவில் 6,013 யானைகள் உள்ளன. அசாம் 4,159, தமிழகம் 3,136, கேரளா 2,783 என உள்ளது.
யானைகள் வாழ்விடம் தேயிலை, காபி தோட்டங்களாகவும், நிலங்களில் வேலி அமைத்தல், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது போன்ற காரணங்களால் யானைகள் பாதிக்கப்பட்டு வருவ தாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
வன உயிரின சட்டங்களில் மாற்றங்கள் செய்து, உடனடியாக யானைகள் வாழ்விடங்கள் குறையாமல் இருப்பதை உறுதி செய்தால் மட்டுமே அவற்றின் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியும் என வன உயிரின ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.