மாணவர்கள் தப்பாக முடிவெட்டி வந்தால் மொட்டை அடியுங்கள்; பள்ளி விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு
மாணவர்கள் தப்பாக முடிவெட்டி வந்தால் மொட்டை அடியுங்கள்; பள்ளி விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு
ADDED : நவ 02, 2026 06:45 PM

விருதுநகர் அருகே காரியாபட்டியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
நமது மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் முடி வெட்டுதலை திருத்தம் செய்ய வேண்டும். நன்றாக முடி வெட்டிக்கொண்டு வரும் மாணவர்களை அனுமதியுங்கள். தப்பு, தப்பாக முடி வெட்டிக் கொண்டு வருபவர்களை மொட்டை அடியுங்கள், தப்பே இல்லை.
அப்போது தான் அந்த மாணவர் சரியாக இருப்பார். முதல் தப்பே அங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது. இரண்டாவது தவறு முழங்கால் வரை பேண்ட் அணிவது. பெற்றோர்கள் ஏன் இதை அனுமதிக்கிறீர்கள்? முதல் தவறே நம்மிடம் இருந்து தான் ஆரம்பிக்கிறது.
நமது பிள்ளை தப்பே செய்திருக்கமாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் சேர்க்கை சரியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் சரிபார்ப்புக்கு போய் நிற்பார்கள். அப்போது காவல்துறை உன் தோற்றத்தை பார்த்தாலே தெரிகிறது, இந்த காரியத்தை செய்திருப்பாய் என்று கூறுவர். கண்டிப்பாக அப்படித்தான் சொல்ல முடியும். ஒருவரின் தோற்றம் தான் அவரின் கேரக்டரை நிர்ணயிக்கிறது.
இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசினார்.
