தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பிரதமர் பதவியை மறுத்ததற்கு என்ன காரணம்: சொல்கிறார் சோனியா

பிரதமர் பதவியை மறுத்ததற்கு என்ன காரணம்: சொல்கிறார் சோனியா

பிரதமர் பதவியை மறுத்ததற்கு என்ன காரணம்: சொல்கிறார் சோனியா

44


UPDATED : நவ 10, 2026 06:10 PM

ADDED : நவ 10, 2026 05:15 PM

Follow on GoogleFavourite on Google

44

UPDATED : நவ 10, 2026 06:10 PM ADDED : நவ 10, 2026 05:15 PM


44
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர்-

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா எழுதிய '' Belonging: A Journey of Love' என்ற சுயரிதை புத்தகம் இன்று வெளியானது.

இந்த புத்தகத்தில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

அரசியலுக்கு வந்தது ஏன்


பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் தங்களது திட்டத்தை நிறைவேற்றும் ஒரே நோக்கத்துடன் செல்கின்றன என்பதற்கான அறிகுறிகள் தெளிவாக இருந்தன. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 1996 ல் காங்கிரசை தோற்கடித்து வெற்றி பெற்ற பாஜ, தனது விஷத்தை வெளிப்படையாக பரப்பவும், மதசார்பற்ற கொள்கைகள் மற்றும் காங்கிரஸ் உறுதியளித்த ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளுக்கு எதிராக ஒரு அடித்தளத்தை உருவாக்குவதற்கு அதிக நம்பிக்கை பெற்றது.

காங்கிரசில் பல ஆண்டுகளாக உறுப்பினராகவும், அமைச்சர்களாகவும் இருந்த அர்ஜூன் சிங், என்டி திவாரி மற்றும் மொஹ்சினா கித்வாய் ஆகியோரை அடங்கிய குழுவை ஆதரிக்குமாறு 1995 ல் என்னிடம் கேட்டனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

அதற்கு அடுத்த ஆண்டு ஜி.கே. மூப்பனார் மற்றும் சிதம்பரம் ஆகியோரும், 1980 ல் மாதவராவ் சிந்தியாவும் காங்கிரசில் இருந்து வெளியேறி வேறு கட்சியை நிறுவினர். 1997 ல் மாநில தலைமை உடனான கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் என்ற கட்சியை மம்தா உருவாக்கினார்.



1997 ல் கொல்கட்டாவில் நடந்த காங்கிரசின் 80வது மாநாட்டிற்கு என்னை சீதாராம் கேசரி அழைத்தார். அப்போது முதன்மை உறுப்பினரானேன். கட்சியின் நிலைமை மோசம் அடைந்து வருவதாக தோன்றியதால், கட்சிக்கு நான் ஏற்க வேண்டும் என அழுத்தம் வந்தது. இதில் பல குழப்பம் ஏற்பட்டது. காங்கிரசில் நடப்பதும், எதிர்காலம் குறித்தும் கவலை ஏற்படுத்தியது.

இந்த காலத்தில் பகவத் கீதையை வாசித்தேன். அர்ஜூனனின் செயல்களின் பலன்களை பற்றி கவலைப்படாமல் தர்மத்தை செய்ய கடவுள் கிருஷ்ணர் அளித்த அறிவுரை எனது சந்தேகங்களை போக்க உதவியது. நான் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு குறித்து தெளிவுபடுத்தவும் பகவத் கீதை உதவியது. சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. நான் வெளியே சென்று, கடமையாற்ற அழைக்கப்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை செய்தேன்.



பிரதமர் பதவியை ஏற்காதது ஏன்


2004 ல் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் படுகொலை சம்பவம் காரணமாக நான் பிரதமர் ஆகக்கூடாது என்பதில் ராகுலும் பிரியங்காவும் உறுதியாக இருந்தனர். அதேநேரம் பிரதமர் பதவியை ஏற்கும்படி காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர்.

எனது மனம் நொடிக்கு நொடி ஊசலாடியது. எனது உள்மனது,'' சோனியா உனக்கு நீயே உண்மையாக இரு. இந்த பதவியை ஏற்க வேண்டாம் என்பத உனக்கு எப்போதுமே தெரியும். அதை விட்டுவிடு'' எனக்கூறியது.



இந்த முடிவை எடுத்த பின்னர், நேராக எனது மகனிடம் கூறினேன். எனது கைகளை பற்றிய அவர், '' இது சரியான முடிவு'' என்றார்.

பிரதமர் பதவியை ஏற்க மன்மோகன் சிங் தயங்கினார். ஆனால் அவரை சம்மதிக்க வைத்தேன்



இத்தாலி பாஸ்போர்ட்

எனது வாழ்க்கையின் ஒரு அங்கம் இத்தாலி பாஸ்போர்ட். அது தான் என்னை இந்தியாவுக்கு அழைத்து வந்தது. இதனால், இத்தாலி பாஸ்போர்ட்டை என்னுடன் வைத்து கொண்டேன். இதனால், எனது பெற்றோர்களை எளிதாக பார்க்க முடிந்தது. இவ்வாறு அந்த புத்தகத்தில் சோனியா கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி

முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரசின் மூத்த தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி உடனான அனுபவம் குறித்து சோனியா கூறியதாவது: பிரணாப் முகர்ஜி கலைக்களஞ்சியமாக கொண்டாடப்பட்டார். காங்கிரஸின் நீண்ட வரலாறு அவருக்குள் இருந்தது. இதனால், கட்சி குறித்த எந்த கேள்விக்கும் அவரால் உடனடியாக பதில் அளிக்க முடியும்.

1984 ல் ராஜிவ் பிரதமர் ஆனார். அப்போது கட்சியில் தான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த பிரணாப் முகர்ஜி, சொந்த கட்சி ஒன்றை நிறுவினார். பிறகு 1989 ல் காங்கிரசில் இணைந்தார்.காங்கிரஸ் ஆட்சியின் போது பல முக்கிய இலாகாக்களை அவர் வகித்து இருந்தார். அவரின் நீண்ட அனுபவம் மற்றும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இயற்கையாக அவரை பிரதமர் வேட்பாளர் ஆக்கியது.

காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்துடன் பிரணாப்முகர்ஜிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2010 ல் ஒரு முறை தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், ''ஒரு வேளை தலைமைப் பதவியில் மாற்றம் தேவைப்படும் நேரம் இதுவாக இருக்கலாம்'' என்ற அவரது கருத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் ஆக வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் ஆசையின் குறிப்பாகவே நான் புரிந்து கொண்டேன்



நான் தலைப்பை மாற்றி பேசினேன். அவர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம். அதற்காக அவர் என் மீது அதிருப்தி கொண்டதாக ஒரு போதும் உணரவில்லை.இவ்வாறு அந்த புத்தகத்தில் சோனியா கூறியுள்ளார்.

பிரணாப் மகள் கண்டனம்

இது தொடர்பாக பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:இதில் என்ன அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது. அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பல பத்தாண்டு கால அனுபவம், கடின உழைப்பு மற்றும் ஒரு சிறந்த அறிவு ஆகியவற்றை கொண்ட ஒருவர் லட்சியம் கொண்டவராக இருப்பது குற்றமா?

திறமையான எந்தவொரு அரசியல்வாதிக்கும் இந்த லட்சியம் இருக்கும். எனது தந்தை எளிய பின்னணியில் இருந்து உயர்ந்தவர். முழுமையான தகுதி மற்றும் கடின உழைப்பின் வாயிலாக தான் அனைத்தையும் சாதித்தார். வாரிசுரிமை காரணமாக பிரதமர் பதவி உட்பட எந்த பதவியையும் அவருக்கு வழங்க யாருமில்லை. தகுதியான ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தால் என்ன தவறு இருக்கிறது.

நேரு குடும்பத்தை தாண்டி ஒருவர் அத்தகைய லட்சியத்தை வளர்த்ததுடன் அதை தைரியமாக சொன்னதை கண்டு சோனியா அதிர்ச்சி அடைந்தார். என் மீது பிரணாப் முகர்ஜி அதிருப்தி அடையவில்லை என சோனியா கூறியுள்ளார். அவரது டைரி மற்றும் என்னுடன் பேசியதில் இருந்து, சோனியா உள்ளிட்ட வேறு யார் மீதும் பிரணாப் முகர்ஜி குறையாக கருதவில்லை என்று அவருக்கு உறுதியாக கூற விரும்புகிறேன். அவர் யதார்த்தவாதி. இவ்வாறு ஷர்மிஸ்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us