ADDED : டிச 11, 2025 07:49 PM

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணின் அடிப்பகுதி ஆகம விதிமுறைப்படி உள்ளது. இது தீபத்தூண் என அதில் எழுதப்பட்டுள்ளது என டாக்டர் ஜேஎஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், அது நிலஅளவைக்கல் என்று சிலர் ஆதாரமற்ற பொய்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில், டாக்டர் ஜேஎஸ் ராஜ்குமார் என்பவர் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 1872 வரை இதுபோன்ற பல தூண்களை இந்தியா முழுவதும் Trigonometri Society Of India அமைப்பு முதல் முறையாக மேப்பிங் செய்தது. அந்த தூண்களை பார்த்தால் திருப்பரங்குன்றம் தூண்போல் இருப்பது உண்மைதான். நாக்பூரிலும் செயின்ட் தாமஸ் பகுதியிலும் இதுபோன்ற தூண்கள் இருக்கின்றன. ஆனால், அதன் அடிப்பகுதியை பார்க்கும்போது ஆகம விதி, சைவ ரீதியில் இருக்கும் ஒரே தூண் திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது ஆகும்.
இந்தியாவில் உள்ள எந்தத் தூணிலும் எழுத்துகள் இல்லை. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில், நமது தமிழக தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த கால எழுத்துகளில், ' இது தீபத்தூண், எந்தவொரு ஹிந்து, சைவப் பிரிவை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்ற முடியும்,' என விவரமாக உள்ளது. இது உள்ள புத்தகத்தை தமிழக அரசு 1981 ல் வெளியிட்டது. அதில் ஒரு சில பிரதிகள் மட்டுமே உள்ளன. தலைமை தொல்லியல் ஆராய்ச்சியாளராக இருந்த போஸ் என்பவர் அந்த புத்தகத்தை எழுதினார். இவ்வாறு அவர் கூறினார்.

