/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சிலம்பம்: திருவள்ளூர் அணி சாம்பியன்
/
மாநில சிலம்பம்: திருவள்ளூர் அணி சாம்பியன்
ADDED : அக் 09, 2025 02:44 AM

சென்னை, கோவையில், மாநில அளவில் நடந்த சிலம்ப போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
தமிழ்நாடு 'அஷ்டடோ அகடா' சங்கம் சார்பில், மாநில அளவிலான 4வது 'அஷ்டடோ அகடா' சிலம்ப போட்டி, கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் உள்ள அக் ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அக்., 4, 5ம் தேதிகளில் நடந்தது.
இதில், மாநிலம் முழுதும் இருந்து, 600-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். போட்டியை, மன்சூரின் குங்-பூ சங்கத்தின் உலகத் தலைவர் மல்லை சத்யா துவக்கி வைத்தார்.
அஷ்டடோ அ கடா சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில்நாதன், மாநில பொதுச் செயலர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர். போட்டி முடிவில், திருவள்ளூர் மாவட்ட அணி 44 தங்கம், 17 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்கள் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதில் தங்கம் வென்ற வீரர் - வீராங்கனைய ர், தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனர். சாம்பியன் பட்டம் பெற்ற திருவள்ளூர் அணிக்கு பயிற்சி அளித்த, 'டாக்டர் டேவிட் மேனியல்ராஜ்' தற்காப்பு கலை பயிற்சி மையத்தின் தலைமை ஆசான் பார்த்திபன் மற்றும் பயிற்சியாளர் சுதாகர் ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.