தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பஞ்சாபில் பல்கலைக்கு மாணவர்கள் தீ வைப்பு; போராட்டத்தில் வெடித்தது வன்முறை

பஞ்சாபில் பல்கலைக்கு மாணவர்கள் தீ வைப்பு; போராட்டத்தில் வெடித்தது வன்முறை

பஞ்சாபில் பல்கலைக்கு மாணவர்கள் தீ வைப்பு; போராட்டத்தில் வெடித்தது வன்முறை

10


UPDATED : செப் 27, 2026 06:20 PM

ADDED : செப் 27, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 06:20 PM ADDED : செப் 27, 2026 06:14 PM

10


10
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

பஞ்சாபில் பல்கலைக்கழக மாணவி, கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக பரவிய தகவலால், அந்த பல்கலை கட்டடத்துக்கு மாணவர்கள் தீ வைத்தனர். இதனால், பதற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த தகவல் வெறும் வதந்தி என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாபின், 'லவ்லி புரொபஷனல் பல்கலை'யைச் சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியதையடுத்து, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கபூர்தலா மாவட்டத்தின் பக்வாரா பகுதியில் 'லவ்லி புரொபஷனல்' பல்கலை இயங்கி வருகிறது. இந்நிலையில் பல்கலையின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், மனமுடைந்து, தற்கொலை செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இதனால், ஆவேசமான மாணவர்கள், பல்கலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடந்த நிலையில், நேரம் செல்ல, செல்ல நிலைமை மாற தொடங்கியது. ஒரு சில மாணவர்கள் வளாகத்திற்குள் இருந்த ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகளை அடித்து நொறுக்கினர். பல்கலை கட்டடத்தின் சில பகுதிகளுக்கும் தீ வைத்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.

எனினும், அமைதி அடையாத மாணவர்கள், ஜலந்தர் - பக்வாரா தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார், மாணவர்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் வதந்தி என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us