திமுக ஆட்சியில் திடீரென மாறிய நடைமுறை: நூல் தேர்வு உறுப்பினர் திடுக்கிடும் தகவல்
திமுக ஆட்சியில் திடீரென மாறிய நடைமுறை: நூல் தேர்வு உறுப்பினர் திடுக்கிடும் தகவல்
ADDED : நவ 07, 2026 07:17 AM

- நமது சிறப்பு நிருபர் -
நுாலகத்துக்கு புத்தகம் தேர்வு செய்ய, 13 பேர் கொண்ட குழு விபரம், 2025 நவம்பர் 5ம் தேதி வெளியா னது. இதில், மாநில திட்டக் குழு உறுப்பினராக இருந்த வரும், விலங்கியல் துறை பேராசிரியருமான சுல்தான் இஸ்மாயில் இடம் பெற்றிருந்தார். நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., பொது நுாலகத்துறை இயக் குநராக பணியாற்றினார். அவர் இருந்தவரை சரியாகச் சென்றது. பேராசிரியர்கள், நிபுணர்களிடம், 'உங்க ளுக்கு என்ன புத்தகம் வேண்டும்?' என்று பட்டியல் கேட்டார். அதில், முக்கியமான புத்த கங்களை தேர்வு செய்யும் பணி நடந்தது.
நான் விலங்கியல், சுற்றுச் சூழல் துறைகளை பார்த் தேன். கல்லுாரிகளில் எந்த புத்தகங்களையும் வாங்க முடியாது. உயர் கல்வி மற் றும் போட்டி தேர்வுக்கு எது பயன்படும் என்று யோசித் தோம். நன்கறிந்த ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தை வைத்து தேர்வு செய்தோம். பிறகு, 'சாப்ட்வேர்' தயா 9:29 AM ரித்து அந்த புத்தக பட்டியல்களை பதிவேற்றினார்.
திடீரென அந்த நடைமுறைகளை கைவிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் ஒரு, 'கூகுள் ஷீட்' அனுப்பி, புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர் உள்ளிட்ட விபரங்களை நிரப்பச் சொன்னார்கள். 'வெற்று ஷீட்டில் நிரப்ப முடியாது; பட்டியல் கொடுங்கள்; அதில் தேர்வு செய்கிறேன்' என கூறினேன். மேலும், 'இது தவறான நடைமுறை. அதனால், புத்தகங் களை தேர்வு செய்ய முடியாது' என கூறி விலகிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
