தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/நோட் பண்ணிக்கோங்க... ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ இன்று பங்குச்சந்தைகளில் பட்டியல்!

நோட் பண்ணிக்கோங்க... ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ இன்று பங்குச்சந்தைகளில் பட்டியல்!

நோட் பண்ணிக்கோங்க... ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ இன்று பங்குச்சந்தைகளில் பட்டியல்!


UPDATED : அக் 28, 2026 12:44 AM

ADDED : அக் 27, 2026 10:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:44 AM ADDED : அக் 27, 2026 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

ரூபாய் 10.34 லட்சம் கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ இன்று (அக்டோபர் 28) பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படுகிறது.

உலகிலேயே ஒரு கோடிக்கும் மேலான விண்ணப்பங்களை பெற்ற முதல் ஐ.பி.ஓ., என்ற சாதனையையும் ஜியோ படைத்துள்ளது. ஜியோ ஐ.பி.ஓ., வெளியீட்டின் இறுதியில், மொத்தம் 22.19 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதிகபட்சமாக, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 70.55 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 14 மடங்கு விண்ணப்பங்களும், சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 2.72 மடங்கு விண்ணப்பங்களும் வந்துள்ளன.

இதுவரை பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் மூலமாக மட்டுமே பெறப்பட்ட ஜியோ நிறுவனத்தின் பங்குகள், நாளை (அக்டோபர் 28) காலை 10 மணி முதல் பங்குச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்திற்கு வரும்.

உங்களுக்கு ஜியோ ஐபிஓ-வில் பங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தால் , அவை நேற்று (அக்டோபர் 27) உங்கள் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கும். இன்று காலை முதல் அந்தப் பங்குகளை நீங்கள் சந்தை விலைக்கு விற்கவோ அல்லது கூடுதல் பங்குகளை வாங்கவோ முடியும்.

ஜியோ ஐபிஓவின் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.1,119 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை பங்குச் சந்தை தொடங்கும் போது முதலீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து இதன் ஆரம்ப விலை ரூ.1,119ஐ விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மாறலாம்.

தற்போதைய நிலவரப்படி, பிரீமியம் ஒரு பங்கிற்கு ரூ.244 முதல் ரூ.246 வரை கூடுதலாகக் காட்டுகிறது. இதன் அடிப்படையில், ஜியோ பங்கு இன்று ரூ.1,363 முதல் ரூ.1,365 என்ற விலையில் பட்டியலிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us