தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்: முதலிடத்தில் ஜாக் லோடன்

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்: முதலிடத்தில் ஜாக் லோடன்

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர்: முதலிடத்தில் ஜாக் லோடன்


ADDED : அக் 27, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2026 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர்-

உலகளவில் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. ரோஜர் மூர், சீன் கேனரி, திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனடியல் கிரெய்க் என பல நடிகர்கள் அந்த கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றனர். கடைசியாக ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து இருந்தார்.

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர் குறித்து ரசிகர்கள் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தை டெனிஸ் வில்லெனோவ் இயக்க உள்ளார்.

அதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் கலம் டர்னர், ஜாக் லோடன், மற்றும் ஜோஷ் ஓ கானர் உள்ளிட்டோர் பரிசீலனை செய்யப்பட்டு ஸ்கிரீன் டெஸ்ட்டில் பங்கேற்றதாக தகவல் வெளியானது.

அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் ஜாக் லோடன் மற்றும் ஜோஷ் ஓ கானர் ஆகியோரிடம் ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டது. ஆன்லைனில் நடந்த ஆய்வில் ஜாக் லோடன் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிக்க 67 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தேர்வு பட்டியலில் அவர் முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ஜாக் லோடன் தேர்வாகும் பட்சத்தில் , கேனரிக்கு பிறகு ஸ்காட்லாந்தை சேர்ந்த நடிகர் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த பெருமை இவருக்கு கிடைக்கும். எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

யார் இவர்

ஸ்காட்லாந்தை சேர்ந்த பெற்றோருக்கு 1990ல் பிறந்த இவர், பல மேடை நாடகங்களில், ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருந்தார். இதில் ஒரு சில படங்களுக்கு பல விருதுகளை பெற்றார். பல நாடகங்களில் அவர் உளவாளியாக நடித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us