தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு


UPDATED : ஏப் 03, 2026 10:20 PM

ADDED : ஏப் 03, 2026 03:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2026 10:20 PM ADDED : ஏப் 03, 2026 03:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு உள்ளது. அக்கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வேட்பாளர் தேர்வில் அக்கட்சியில் எழுந்தகுளறுபடி காரணமாக பட்டியல் வெளியிடுவது தாமதமானது. நேற்று ராகுல், கார்கே உள்ளிட்டோர் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை,காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டு உள்ளார்.

இதன்படி

01. பொன்னேரி - துரை சந்திரசேகர்

02. வேளச்சேரி- அசன் மவுலானா

03. ஸ்ரீபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை

04. சோளிங்கர்- முனிரத்னம்

05. ஊத்தங்கரை- குப்புசாமி

06. கிருஷ்ணகிரி - செல்லகுமார்

07. பெண்ணாகரம்- தமிழ் குமரன்

08. ஈரோடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்

09. ஆத்தூர் - அர்த்தநாரி

10. ஊட்டி - ராமச்சந்திரன்

11. கவுண்டம்பாளையம் - சூரிய பிரகாஷ்

12. சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு

13. துறையூர்- விச்சு லெனின் பிரசாத்

14. கடலூர் - சந்திரசேகரன்

15. மயிலாடுதுறை - ஜமால் யூனுஸ் முகமது

16. அறந்தாங்கி - ராமசந்திரன்

17. காரைக்குடி - மாங்குடி

18. உசிலம்பட்டி - சரவணகுமார்

19. சிவகாசி - கணேசன் அசோகன்

20. திருவாடனை - ராம கருமாணிக்கம்.

21.ஸ்ரீவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்

22. சங்கரன்கோவில் - சங்கை கணேசன்

23. அம்பாசமுத்திரம் - வி.பி.துரை

24. நாங்குநேரி - ரூபி மனோகரன்

25. குளச்சல் - தாரகை கத்பர்ட்

26. விளவங்கோடு - பிரவீன்

27. கிள்ளியூர் - ராஜேஷ் குமார்

* மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

* 12 எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.

* சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாமக கவுரவ தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

5 பேருக்கு வாய்ப்பு மறுப்பு

காங்கிரசில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏக்களான பிரின்ஸ்(குளச்சல்), கணேஷ்(ஊட்டி), ராஜ்குமார்( மயிலாடுதுறை) பழனி நாடார்( தென்காசி), ராதாகிருஷ்ணன்( விருத்தாசலம்) ஆகியோருக்கு இப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

* விஜயதாரணி ராஜினாமா செய்ததால் காலியான விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற தாரகை கித்போர்டு, இப்போது குளச்சல் தொகுதியில் போட்டியிடுகிறார். விளவங்கோடு தொகுதியில் பிரவீன் என்பவர் களமிறக்கப்பட்டு உள்ளார்.2 பெண்களுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us