தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி; முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 22, 2025 08:30 AM

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: பிரதமர் மோடி உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நான் பலமுறை கோரியுள்ளேன். இந்த திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவை நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள்.
தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர் சரோஜினி சர்மா அனுப்பிய கடிதத்தில், திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

