தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வாரணாசியை கலக்கும் தமிழர்!

வாரணாசியை கலக்கும் தமிழர்!

வாரணாசியை கலக்கும் தமிழர்!

7


ADDED : நவ 08, 2026 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2026 02:47 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரணாசி: உ.பி.,யின் வாரணாசியில் ரயில்வே நிலையத்திலிருந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால், டிராபிக் நெருக்கடிகளை சமாளித்து ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் இந்த வருட கடைசியில் இந்த நிலை மாறி, 16 நிமிடங்களிலேயே எந்தவித போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல் கோவிலுக்கு சென்றுவிடலாம்.

மொத்தம் 807 கோடி ரூபாயில் நடைபெற்று வரும், 'காசி ரோப் வே' திட்டம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. காசி கன்டோன்மெண்ட் ரயில் நிலைய வாசலில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் வரை இந்த வான் வழியே செல்லக் கூடிய ரோப்வேயில் செல்லலாம். இன்னும் 10 சதவீத வேலை மட்டுமே மீதம் உள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி தன் லோக்சபா தொகுதியான காசியில் இதை தொடக்கி வைக்க உள்ளார்.

இந்த ரோப்வேயில் 153 கேபின்கள் இயக்கப்படும். ஒரு கேபினில், 10 பயணியர் வீதம், ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் 3,000 பேர் பயணிக்கலாம். நாள் ஒன்றுக்கு, 96,000 பேர் இதில் பயணிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளை கவனித்து வருபவர் கடையநல்லூரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ். ராஜலிங்கம்.

திருச்சி என்.ஐ.டி.,யில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், 2009 உத்திர பிரதேச கேடர் அதிகாரியாவார். தற்போது, வாரணாசியின் டிவிஷன் கமிஷனராக இவர் உள்ளார். முன்னதாக, காசியின் கலெக்டராக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய ராஜலிங்கம், தற்போது காசியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.

இந்தத் திட்டத்தை சர்வதேச பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து மத்திய அரசு வடிவமைத்துள்ளது. ஆனால், வாரணாசியில் இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் முக்கிய அதிகாரி ராஜலிங்கம். ரோப்வே பணிகள் நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அடிக்கடி திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு, வேலையை துரிதப்படுத்தி வருகிறார்.

நிலம் கையகப்படுத்துதல், மின்சார வாரியம், போக்குவரத்துக் காவல் போன்ற பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொள்கிறார் இவர். அடுத்த மாத இறுதிக்குள் ரோப்வே திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் ராஜலிங்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us