வரி விதிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
வரி விதிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
ADDED : டிச 17, 2025 04:19 PM

புதுடில்லி: சர்வதேச வர்த்தகத்தில் வரிவிதிப்பு என்பது ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
2025ம் ஆண்டு இந்திய பொருளாதார மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வர்த்தகம் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இல்லை. இந்தியா பெரும்பாலும் உள்நோக்கத்துடன் இருப்பதாக விமர்சிக்கப்பட்டாலும், அது உள்நாட்டு தொழில்களைப் பாதுகாக்க மட்டுமே வரிகளைப் பயன்படுத்தியுள்ளது. வரிவிதிப்பை ஒருபோதும் ஆயுதமாக பயன்படுத்தியது கிடையாது. சர்வதேச வர்த்தகத்தில் வரிவிதிப்பு என்பது ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா கவனமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக நமது பொருளாதார வலிமையே நமக்கு கூடுதல் நன்மையைத் தரும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாத்தது. சில நாடுகள் வரிகள் நல்லதல்ல. யாரும் இந்த நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று கூறுகின்றன. ஆனால் திடீரென்று புதியவர்கள் வந்து நாங்கள் வரி விதிப்போம் என்று கூறுகின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
அமெரிக்கா விதித்த அதிக வரிகளால் உலகளாவிய வர்த்தகம் சீர்குலைந்து வருவதால், வரிவிதிப்பு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு கூறி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மெக்சிகோவும் சமீபத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகளுக்கு அதிக வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

