ADDED : செப் 08, 2025 12:31 AM

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 10 நாட்கள் நீடித்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பின், விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்பட்ட மும்பையின் ஜூஹூ கடற்கரை பகுதியில் துாய்மைப் பணிக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து, அம்ருதா பட்னவிசின் 'திவ்யராஜ்' என்ற அரசு சாரா அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதன்படி, ஜூஹூ கடற்கரையில் நேற்று துாய்மைப் பணியில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ராணி உள்ளிட்டோருடன் அம்ருதா பங்கேற்றார்.
''ஒரே ஒரு பூமி தான் உள்ளது. அதன் கடற்கரைகளையும், காடுகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. விநாயகர் சிலைகள் கரைப்புக்கு பின், மும்பை ஜூஹூ கடற்கரையில் துாய்மைப் பணிக்கு ஏற்பாடு செய்தோம். இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன,'' என அம்ருதா கூறினார்.