தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; எந்த மதவாத செயலும் கிடையாது; சொல்கிறார் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; எந்த மதவாத செயலும் கிடையாது; சொல்கிறார் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்; எந்த மதவாத செயலும் கிடையாது; சொல்கிறார் அண்ணாமலை


ADDED : நவ 21, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2026 03:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு வேதனை அளிப்பதாக சிவகங்கையில் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்னையின் போது, தவெக தலைவர் விஜய், அரசியலுக்கு வந்து விட்டார். ஆனால், அதுபற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தவெக அரசு ஆதரவா? எதிர்ப்பா? என்பதை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும். எந்த நிலைப்பாடுமே தேர்தலுக்கு முன்பு எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு, எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

தீர்ப்புகள் அனைத்தும் மனுதாரருக்கு ஆதரவாகவே வந்தன. அப்படியிருந்தும், எதன் அடிப்படையில் தமிழக அரசு தீபத்தூண் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என தெரியவில்லை. இந்தாண்டு ஆட்சியில் இருக்கும் தவெக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போன ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைத்துள்ள வாதங்களும், இந்தாண்டு தவெக அரசின் வாதங்களும் சம்பந்தமில்லை.

போன ஆண்டு ஜெயின் துறவிகளுடைய தூண். இந்தாண்டு பிரிட்டீஷ் காலத்தின் மைல்கல். திமுக, தவெக அரசுகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. கோவிலுக்கு போக முதல்வர் விரும்புகிறார். அதே போலத்தானே இங்குள்ள ஹிந்துக்களும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு போக விரும்புவார்கள். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்காக, இங்கு யாரும் மதவாத செயல்களில் ஈடுபடவில்லை. அவர்களின் உரிமையைத் தானே கேட்கிறார்கள்.

போன வருடம் எந்த முஸ்லிமும் பிரச்னை பண்ணவே இல்லை. தீர்ப்பு வந்த பிறகு, இவர்களாக வந்து ஜமாத்தை அழைத்து வந்து வழக்கு போட செய்தனர். இந்த இரு அரசுகளும் எல்லா மதங்களையும் சமமாக பதிப்பதே கிடையாது. முதல்வர் விஜய், என்ன வெங்காயம் மற்றம் செய்தார். திமுக, அதிமுக ஒரே அரசியலை செய்கிறார்கள். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், 35 சதவீத மக்கள் மாற்றி ஓட்டுப் போட்டார்கள்.

ஆட்சியில் அந்த மாற்றத்தை நாங்கள் பார்க்க வேண்டுமல்ல. கலெக்டர் மாநில அரசு எடுத்துள்ள முடிவை தானே அவர் சொல்கிறார். திமுக அரசு சொன்னதை அப்படியே சொல்வோம் என்றால், அது என்னாங்கனா அது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுகவின் செயல்பாடு முற்றிலும் அதிர்ச்சையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

தவெக அரசுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று சொல்பவன் நான். இப்போதாவது முதல்வர் விஜய் பேச வேண்டும். உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும். அதற்கு தடை கல்லாக இருக்கக் கூடாது. போட்டி பொறாமை பார்க்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us