10 ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு கொலைகள் குறைவு; டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
10 ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டு கொலைகள் குறைவு; டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்
ADDED : நவ 18, 2026 04:20 PM

சென்னையில் அவர் அளித்த பேட்டி;
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரித்து வருகிறோம். கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 74 சதவீதம் கூடுதலாக வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம்.
25 சதவீதம் அதிகமாக கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். போதை பொருள் வழக்கில் 73 சதவீதம் குற்றவாளிகளை கூடுதலாக கைது செய்திருக்கிறோம்.
குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் சீல் வைக்கப்பட்ட விஷயத்தில் கடந்தாண்டுகளை விட 64 சதவீதம் அதிகமாக முடக்கி இருக்கிறோம். அந்த கணக்குகளில் இருக்கும் பணத்தையும் முடக்கி வைத்துள்ளோம். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 234 சதவீதம் அதிகமாகும்.
தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை பயன்படுத்தியது தொடர்பான வழக்குகளில் கடந்த ஆண்டில் 204 வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம். ஆனால் இந்த ஆண்டு 497 வழக்குகளை பதிவு செய்திருக்கிறோம். அதாவது 1034 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு மே 1ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை 1 லட்சத்து 45 ஆயிரத்து 315 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 4 லட்சத்து 85 ஆயிரம் போதை மாத்திரைகளை கைப்பற்றி உள்ளோம். சதவீதம் அடிப்படையில் 234 சதவீதம் அதிகமாகும். குற்றம்சாட்டப்பட்டவர்களின் கைது நடவடிக்கைகளில் 94 சதவீதம் அதிகரித்துள்ளது.
எந்த புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தாலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முன்னேற்றம் இருக்கிறது. முக்கிய நிகழ்வுகளின் போது பாதுகாப்பு முறையாக வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
