தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது: பக்தர்கள் பக்தி பரவசம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது: பக்தர்கள் பக்தி பரவசம்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது: பக்தர்கள் பக்தி பரவசம்


ADDED : நவ 28, 2026 04:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 04:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தீபம் ஏற்றப்பட்டது.

தீபம் ஏற்றுவதை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் இன்று காலை மதுரை வந்தனர். தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான பணிகள் துவங்கின.நெய், திரி, கலயம் உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் தீபத்தூண் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. சாரமும் கட்டப்பட்டது. தீபம் ஏற்றும் கொப்பரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும். 50 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது.

பிற்பகலில் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபனர், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் திருப்பரங்குன்றம் வந்து அங்கிருந்து மலையேறி தீபத்தூண் பகுதிக்கு சென்றனர்.

இதன் பிறகு 5 மணிக்கு தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இதனை, பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்த பக்தர்கள் ' முருகனுக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டனர்.

தங்களது 100 ஆண்டு கால கனவு இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நிறைவேறியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் ஏற்ற அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியல்!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டவர்கள் யார் என்ற பட்டியல் விவரம் வெளியாகி இருக்கிறது.

* ஓய்வுபெற்ற நீதிபதி பார்த்திபன்

* ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன்

* மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா

* போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்

* சிஆர்பிஎப் ஐஜி திருமலா விக்ரம்

* கண்காணிப்பு சிறப்பு அலுவலர் வீர ராகவ்

* வருவாய் கோட்டாட்சியர் கெரனாபுக் லித்தியா

* சிஆர்பிஎப் ஐஜி முகேஷ்குமார்

* ஸ்தானிக பட்டர்கள் சாமிநாதர், ரமேஷ், அஜித்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us