தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்று 11.... நாளை 6 மாவட்டங்கள்.... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இன்று 11.... நாளை 6 மாவட்டங்கள்.... வெளுத்து வாங்கப்போகும் கனமழை

இன்று 11.... நாளை 6 மாவட்டங்கள்.... வெளுத்து வாங்கப்போகும் கனமழை


UPDATED : மே 18, 2026 02:45 PM

ADDED : மே 18, 2026 02:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 02:45 PM ADDED : மே 18, 2026 02:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கை; தெற்கு கடலோர ஆந்திராவின் மேல் உள்ள மேலடுக்கு சுழற்சி வரை, கேரளா, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா வழியாக, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும்.

இன்று ; கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

நாளை ; கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை, மற்றும் நீலகிரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us