sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

/

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

1


UPDATED : அக் 20, 2025 04:15 AM

ADDED : அக் 20, 2025 04:03 AM

Google News

1

UPDATED : அக் 20, 2025 04:15 AM ADDED : அக் 20, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஹிந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று (அக்.,20) நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இப்பண்டிகை வருடம் தோறும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியிலோ அல்லது அமாவாசை தினத்தன்றோ வருகிறது. தீபாவளி பண்டிகையை ஹிந்துக்கள் மட்டுமில்லாது சமணம், புத்த மதம் மற்றும் சீக்கிய மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு மதத்திலும் வேறுபடும் தீபாவளி நம்பிக்கை


ஒவ்வொரு மதத்திலும், இடத்திலும் தீபாவளி பண்டிகை வேறுபட்ட காரணங்களை கொண்டுள்ளது. கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை அழித்த நாளாக பெரும்பாலான ஹிந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட இந்தியாவில் ஸ்ரீராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய நாளாக இதை கருதுகின்றனர். சமண மதத்தினை சேர்ந்தவர்கள் மகாவீரரின் இறுதி விடுதலை நாளை குறிக்கும் விதமாக இப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். சீக்கியர்கள் தங்கள் குரு ஹர் கோவிந்த் முகலாய சிறையிலிருந்து விடுதலையான நாளாக தீபாவளியை கொண்டாடுகின்றனர். புத்த மதத்தினர் தீபாவளியன்று செல்வத்தின் தெய்வமாக இருக்கும் லட்சுமியை வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி தேவியை வணங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

கங்கா ஸ்நானம்


தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகாலை எழுந்து உச்சந்தலையில் தேங்காய் எண்ணெய் இட்டு வெந்நீரில் குளிக்கின்றனர். இப்புனித நாளில் இவ்வாறு எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்று ஹிந்துக்களால் நம்பப்படுகிறது.

இறை வழிபாடும் புத்தாடை அணிதலும்


பண்டிகை தினத்தன்று புத்தாடை மற்றும் விதவித இனிப்புகள் பலகாரங்களை பூஜை அறையில் வைத்து கடவுளை மக்கள் வணங்குவார்கள். பின் புத்தாடை அணிந்து கோவில்களுக்கும் சென்று இறைவனை வணங்குவார்கள்.

பட்டாசு வெடித்தல், வாழ்த்துக்கள் பரிமாறுதல்


தீமை அழிந்த நாளை கொண்டாடும் விதமாக தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமான பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வார்கள்.

மக்கள் இந் நன்னாளில் ஒருவருக்கு ஒருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். பிற மதத்தினைச் சேர்ந்த நண்பர்களுக்கும் ஹிந்து மதத்தினைச் சேர்ந்த நண்பர்கள் இனிப்புகள் வழங்கி தங்கள் அன்பினை வெளிப்படுத்துவார்கள்.

இந்நன்னாளில் உலகம் முழுவதும் வசிக்கும் தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் தினமலர் டாட்காம் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது






      Dinamalar
      Follow us