கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
கரூர் சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டையுடன் சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்!
ADDED : அக் 15, 2025 11:47 AM

சென்னை: கரூர் சம்பவத்தை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழக சட்டசபையின் இரண்டாவது நாள் நிகழ்வுகள் இன்று (அக் 15) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கரூர் சம்பவம், கிட்னி திருட்டை கண்டித்து, அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு கைப்பட்டை அணிந்து, பங்கேற்றனர். இதற்கு, “எல்லோருக்கும் பிபி கூடிடுச்சோன்னு நினைச்சுட்டேன்” என்றார், சபாநாயகர் அப்பாவு.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ரகுபதி கூறியதாவது: சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு அடையாளம் கொடுப்பார்கள். அதேபோல இன்றைக்கு தனி அடையாளத்தோடு நம்முடைய உறுப்பினர்கள் சிலர் இங்கே வந்து இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர்கள் பற்றி தவறாக சொல்லவில்லை, என்றார்.
சட்டசபையில் சிரிப்பலை
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அமைச்சர் துரைமுருகன் அமர்ந்தே பதில் சொல்லலாம். நீங்கள் நல்லா இருக்கீர்கள் என்பது எனக்கு தெரியும் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
உடனே, '''என்னை வயதானவனாக காண்பிக்க வேண்டாம், எனக்கு இன்னும் வயதாகிவிடவில்லை' என அமைச்சர் துரைமுருகன் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதற்கு அப்பாவு, ''நாங்கள் அதை சொல்லவில்லை. இளைஞர் ஆக தான் பார்க்கிறோம்'', என்றார்.