உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 16, 2026 07:40 PM

அ நிறம் | அளவு
நமது நிருபர்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நாளை, நவம்பர் 17ம் தேதி, மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். மணிலாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
நூற்றாண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த குருத்வாரா, மிகுந்த ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு மையமாகத் திகழ்கிறது. குருக்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட சீக்கிய சமூகம், உலகளவில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ளது.
பிறருக்குச் சேவை செய்வதிலும், சிறந்ததொரு உலகத்தை உருவாக்குவதில் பங்களிப்பதிலும் அவர்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
