திரிபுராவில் வேன் மீது ரயில் மோதல்: பலர் பலி என அச்சம்
திரிபுராவில் வேன் மீது ரயில் மோதல்: பலர் பலி என அச்சம்
ADDED : நவ 20, 2025 06:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகர்தலா: திரிபுராவில் பிக் அப் வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திரிபுராவின் தலாய் மாவட்டத்தின் எஸ்கே பாரா ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. வேனில் பயணித்தவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கிப்போனது.
தகவலறிந்த மீட்புப்படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உ.பி.,யின் மிர்சாப்பூரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

