வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்; தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்தார் தேஜஸ்வி
வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்; தோல்விக்கு பிறகு மவுனம் கலைத்தார் தேஜஸ்வி
ADDED : நவ 20, 2025 06:47 PM

பாட்னா: பீஹார் முதல்வராக 10வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்ற நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆளும் தேஜ கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக, தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: பீஹார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அமைச்சரவை உறுப்பினர்களாக பதவியேற்ற பீஹார் அரசின் அனைத்து அமைச்சர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புதிய அரசு மக்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும். அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றும். பீஹார் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தேஜஸ்வி மவுனம் கலைத்து, புதிய முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

