தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மாணவியருக்கு தொல்லை: பாதிரியார் போக்சோவில் கைது

மாணவியருக்கு தொல்லை: பாதிரியார் போக்சோவில் கைது

மாணவியருக்கு தொல்லை: பாதிரியார் போக்சோவில் கைது

29


ADDED : செப் 04, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

29

ADDED : செப் 04, 2026 06:17 AM


29
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: பள்ளி மாணவியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்துவ பாதிரியார் ஜெயராஜ், 56, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம், பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக, பாதிரியார் ஜெயராஜ், ஆறு மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். நேற்று முன் தினம் ஜெயராஜ் அறைக்கு சென்ற, ஏழாம் வகுப்பு மாணவிக்கு, ஜெயராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி தப்பிக்க முயன்றபோது 'வெளியே சொன்னால் தொலைத்து விடுவேன்' என, மிரட்டியுள்ளார்.

மாணவியின் பெற்றோர் கிராம மக்கள், நேற்று காலை பள்ளிக்கு திரண்டு வந்தனர். ஜெயராஜ் பள்ளியின் பின்வாசல் வழியாக, தப்பியோடிவிட்டார். பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டபோது, ஜெயராஜ், இதேபோல, பல மாணவியருக்கும் தொல்லை கொடுத்தது தெரிந்தது.

போலீசார் ஜெயராஜை போக்சோவில், நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us