டிரம்ப் குறி தவறியது; நோபல் பரிசு கனவு தவிடுபொடி!
டிரம்ப் குறி தவறியது; நோபல் பரிசு கனவு தவிடுபொடி!
ADDED : அக் 10, 2025 02:41 PM

]நமது சிறப்பு நிருபர்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், இந்தாண்டுக்கான பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அதிபர் டிரம்பின் கடந்த கால பேச்சும், திரும்ப திரும்ப நான் போர்களை நிறுத்திவிட்டேன் என்றும் கூறியது தான்.
அதுமட்டுமின்றி அவர் ஒரு படி மேலே போய், 'எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்' என்றும் தெரிவித்தது தான் அனைவரது கவனம் பெற்றது. இதனால் இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
அதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு இந்தாண்டு யாருக்கு என்பதை நார்வே நாட்டு பார்லிமென்ட் குழுவினர் அறிவித்தனர். அவர்கள் டிரம்பின் கனவுகளை தவிடுபொடியாக்கினர். இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை, வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ வென்றார்.
என்ன செய்வார் டிரம்ப்?
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் குறி தவறியது. என்ன தான் 7 போர்களை நிறுத்திவிட்டேன் என்று கூறி வந்தாலும், டிரம்புக்கு நார்வே குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவில்லை. தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்று டிரம்ப் தாறுமாறாக விமர்சனங்களையும், அறிக்கையையும் அள்ளி வீசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.