ADDED : நவ 20, 2026 07:47 PM

மதுரை: வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது. 24 ம் தேதி அரசு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
தவெக அரசு முருக பக்தர்கள் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆனால் முந்தைய அரசை போன்று ''வேறு காரணம் காட்டி தீபம் ஏற்ற மாட்டோம். தடை உத்தரவு போடுவோம். நாங்களாக பிரச்னை ஏற்படுத்துவோம்'' என்று விபரீதமான முடிவுக்கு தவெக செல்லாது என நம்புகிறோம்.
'மலையில் உள்ளது சமண துறவிகள் வைத்த தூண்' என திமுக ஆட்சியில் வாதாடினர். இந்தாண்டு தவெக அரசு வழக்கறிஞர்,' அது ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்ட கல் தூண்' என்கிறார்.
திமுக, தவெகவும் தீபத்தூணை என சமணர்கள் வைத்த தூண், கல் தூண் என பொய்யான வாதத்தை வைத்தனர். உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.
திமுக தேவையில்லாத பிரச்னையை உருவாக்க ஹிந்துக்கள் முஸ்லிம்கள் இடையே தேவையில்லாத பிரச்னையை ஆரம்பித்தது. இருக்கும் ஆதாரத்தின் படி, தனி நீதிபதி, இரு நீதிபதிகள் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தனர். எந்த அடிப்படையில் தவெக எதிர்த்தது என தெரியவில்லை. புரியவில்லை.
திமுக அரசின் வாதமும், தவெக அரசின் வாதமும் சம்பந்தமில்லை. கடந்த ஆண்டு வட துருவம் என்றால், இந்தாண்டு தென் துருவம். போன ஆண்டு பவுர்ணமி என்றால், இந்தாண்டு அமாவாசை.
போன ஆண்டு ஜெயின் துறவிகளின் தூண். இந்தாண்டு ஆங்கிலேயர் காலத்து மைல்கல். திமுக, தவெகவுக்கு வித்தியாசத்தை பார்க்கவில்லை.
தீபம் ஏற்ற வேண்டும் என கேட்கிறோம். யாரும் மதவாத செயலில் ஈடுபடவில்லை. அவர்களின் உரிமையை தான் கேட்கின்றனர். சென்ற ஆண்டு எந்த இஸ்லாமியரும் பிரச்னை செய்யவில்லை. கடந்த ஆண்டு முதலில் அறநிலையத்துறை, அடுத்து தமிழக அரசு முறையிட்டனர். பிறகு ஜமாத்தை இவர்களாக அழைத்து வந்து மேல்முறையீடு செய்ய வைத்தனர்.
மாற்றம் என விஜய் சொன்னார். என்ன வெங்காய மாற்றம் செய்தார். என்ன மாற்றம் செய்தார். 35 சதவீத தமிழக மக்கள் மாற்றி ஓட்டுப்போட்டனர். இரண்டு திராவிட கட்சிகளும் மாற்றி ஆட்சி செய்கின்றன. அரைத்த மாவையே அரைக்கின்றனர். ஒரே அரசியலை செய்கின்றனர். ஒரே நிலைப்பாட்டை எடுக்கின்றனர். மாற்றமில்லை என்று கூறி 1.5 கோடி பேர் மாற்றம் கொடுத்தனர். அப்படி இருக்கும்போது ஆட்சியில் மாற்றத்தை பார்க்க வேண்டும் அல்லவா? திமுக சொல்வதை அப்படியே மாற்றி சொல்வோம் என்றால் என்ன மாற்றம்?
திருப்பரங்குன்றம் விஷயத்தில் தவெக அரசின் செயல்பாட்டு அதிர்ச்சி, வருத்தத்தையும் தருகிறது. தவறு. எந்தவிதமான மத தோஷமோ, மத சண்டையே மத நல்லிணக்கத்திற்கு எதிரானவோ, சண்டையோ போரோ வராது.இனியாவது விஜய் பேச வேண்டும்.
சொல்ல முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் இப்படி ஏறியதில்லை. அத்யாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. கட்டுப்படுத்தவில்லை என்றால் பணவீக்கம் ஏற்படும்.சாமானிய பிரச்னை பாதிக்கும் விஷயம் ஆரம்பித்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
