sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10 ஆண்டுகால திமுக பயணத்துக்கு முடிவு; தவெகவில் இணைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தி

/

10 ஆண்டுகால திமுக பயணத்துக்கு முடிவு; தவெகவில் இணைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தி

10 ஆண்டுகால திமுக பயணத்துக்கு முடிவு; தவெகவில் இணைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தி

10 ஆண்டுகால திமுக பயணத்துக்கு முடிவு; தவெகவில் இணைந்த காமராஜரின் வம்சாவளி பேத்தி

28


ADDED : ஜன 05, 2026 05:33 PM

Google News

28

ADDED : ஜன 05, 2026 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திமுகவில் 10 ஆண்டு காலமாக இருந்த, காமராஜரின் வம்சாவளி பேத்தி, நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக, பாஜ உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய பலர் இன்று இணைத்துக் கொண்டனர். தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவை தொடர்ந்து புதிய கட்சி உறுப்பினர்களுடன் நடிகர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இன்று தவெகவில் இணைந்தவர்களில் சிலர் குறிப்பிடத்தக்க அரசியல் பாரம்பரியமும், பின்னணியையும் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களில் அனைவர் கண்ணிலும் பட்டவர் டி.எஸ்.கே. மயூரி கண்ணன். இவர் முன்னாள் முதல்வர் காமராஜரின் குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். காமராஜரின் தம்பி அண்ணாமலை நாடாரின் பேத்தி.

தொடக்கத்தில் பாஜ.வில் இருந்த மயூரி, பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் 2016ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன், காமராஜரின் இளைய சகோதரி மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்பை அப்போது திமுக அதிகாரப்பூர்வமாக பெரியதாக வெளியிட்டு இருந்தது.

இந் நிலையில், திமுகவில் இருந்து விலகி, தற்போது தவெகவில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டு இருக்கிறார் மயூரி. இணைவுக்கு பின்னர் அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

இன்றைக்கு குடும்ப ஆட்சியை வேரோடு அறுக்கக்கூடிய இளைய தலைவராக மக்கள் அத்தனை பேரும் ஒரு மாற்றத்திற்கான தலைவராக இன்றைக்கு இருக்கக்கூடிய தவெக தலைவரை சந்தித்து கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளேன். கோட்டையில் தவெக கொடி பறக்கும் என்பதே லட்சியம். வெற்றி நிச்சயம்.

திமுகவில் 10 ஆண்டுகாலமாக எந்த பொறுப்பும் இல்லாமல் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன். இன்றைக்கு இளைஞர்களின் விடிவெள்ளியாக இருக்கக்கூடிய ஒரு தலைவரை ஆதரிக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். பொறுப்பை எதிர்பார்த்து நான் தவெகவில் சேரவில்லை. நான் ஒரு 3 தேர்தல்களில் வேலை பார்த்துள்ளேன். விஜய் வெற்றிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

இவ்வாறு மயூரி தமது பேட்டியின் போது கூறினார்.

இதே இணைப்பு விழாவில் தவெகவில் இணைத்துக் கொண்ட மற்றொரு நபர் வி.ஆர். ராஜ்மோகன். இவர் பிரபல எழுத்தாளர், நடிகர் வேல. ராமமூர்த்தியின் மகன் ஆவார். ஓபிஎஸ் ஆதரவாளரான அவர், அதிமுக மீட்புக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார். ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியாக திகழ்ந்த அவர், பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து விலகினார். இன்று தம்மை தவெகவில் இணைத்துக் கொண்டு உள்ளார். இவர்கள் தவிர தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின் தவெகவில் இணைந்தார்.






      Dinamalar
      Follow us