UPDATED : நவ 11, 2026 05:47 PM
ADDED : நவ 11, 2026 04:47 PM

சென்னை: தவெக ஆட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தவெக எம்எல்ஏக்கள் மீதும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாவட்ட கலெக்டரிடம் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் அநாகரிகமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதேபோல, தண்ணீர் வழங்கக் கோரியவர் மீது துணை சபாநாயகரும், தவெக எம்எல்ஏவுமான ரவிசங்கர் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில், 6 மாதங்களில் அவர்கள் தொகுதியில் மேற்கொண்ட பணிகள் குறித்து கே ட்டறிந்தார். தொடர்ந்து மக்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டம் முடிந்து பெ ண் எம்எல்ஏக்கள் திரும்பிய நிலையில் மற்ற எம்எல்ஏக்களுடன், விஜய் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
தீபாவளி பரிசு
இந்த ஆலோசனை கூட்டத்தில், எம்எல்ஏக்களுக்கு பட்டுவேட்டி, பட்டு சட்டை, பட்டு சேலை ஆகியவற்றை பரிசாக முதல்வர் விஜய் வழங்கினார்.
