உண்மைக்கு புறம்பாக பேசும் உதயநிதி; அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
உண்மைக்கு புறம்பாக பேசும் உதயநிதி; அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
ADDED : நவ 26, 2026 05:24 PM

சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் நடந்த கல்வி விருது விழாவில் பங்கேற்ற பிறகு, அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசியதாவது; முதல்வர் சொன்னதைப் போல, கடந்த கால ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சியாக இருந்தது. இந்த ஊழல் ஆட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை, நூலக நூல் கொள்முதலில் நடந்த ஊழலே சாட்சி. பள்ளிக்கல்வித்துறையில், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க, 3 ஆண்டுக்கு ஒருமுறை 177 பள்ளிகளிடம் ரூ.40 லட்சம் வாங்கியிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பள்ளிக்கல்வித்துறையில் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்குமா? என்று சொல்லும் அளவுக்கு நடந்துள்ளது.
இன்னொரு கும்பகோணம் சம்பவத்தை தமிழகம் தாங்காது. இன்னொரு கும்பகோண தீவிபத்தை ஏற்படுத்த திமுக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வித்துறையை அடகு வைத்து விட்டது திமுக.
நூலக முறைகேட்டில் ஆரம்பத்தில் இருந்து வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பை வெளியிட்டு வருகிறோம். புத்தகத்தை அடுக்கி வைக்கும் போது, அச்சிடப்பட்ட சீலை வைத்து எஸ்கேப்பாக முயற்சித்தார்கள். யாரும் தப்பிக்க முடியாது. சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய திமுகவின் ஏஐ ஊழலில் அனைத்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது. இதே கவர்னரை பார்த்து 'நீங்க யாரு? நீங்க போஸ்ட்மேன்' என்று உதயநிதி பேசிய வீடியோக்களை பார்த்தேன். இதே போஸ்ட்மேனை பார்க்க, உதயநிதி லோக் பவனை சுற்றி சுற்றி வருகிறார். நாகரீகம் இல்லாமலும், உண்மைக்கு புறம்பாக உதயநிதி பேசி வருகிறார். நேற்று கூட உதயநிதி உண்மைக்கு புறம்பான தகவலை பேசியுள்ளார். இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. உரிய விசாரணை நடந்து வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்
