தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விஜய் பற்றி ஆய்வு செய்யும் பல்கலை மாணவர்கள்

விஜய் பற்றி ஆய்வு செய்யும் பல்கலை மாணவர்கள்

விஜய் பற்றி ஆய்வு செய்யும் பல்கலை மாணவர்கள்

20


ADDED : ஜூன் 14, 2026 02:22 AM

Follow on GoogleFavourite on Google

20

ADDED : ஜூன் 14, 2026 02:22 AM


20
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சண்டிகர்: ஹரியானாவின் சோனிபத் நகரில் உள்ள அசோகா பல்கலையில், இந்திய பொருளாதாரத்தின் அரசியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்கும், 'விசிட்டிங் புரபசர்'ஆக உள்ளார், காங்., - எம்.பி., பிரவீன் சக்கரவர்த்தி. சமீபத்தில், இவர் தன் வகுப்பிற்கு சென்ற போது, மாணவர்கள் கை தட்டி வரவேற்றதற்கு, 'எதற்கு இந்த வரவேற்பு' என, ஆச்சரியத்துடன் கேட்டாராம். 'நீங்கள் எம்.பி., ஆகிவிட்டீர்கள்; அதற்கு தான்' எனக் கூற, மகிழ்ந்து போனாராம்.

'தமிழக முதல்வர் விஜய்க்கு நீங்கள் நெருக்கம். அவர் குறித்து நாங்கள் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற விரும்புகிறோம். நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட வேண்டும்' என, மாணவர்கள் கேட்டுக்கொள்ள, சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாராம் பிரவீன் சக்கரவர்த்தி. 'நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்' என்றும் உறுதி அளித்துள்ளாராம்.

இதற்கிடையே, அமெரிக்காவின், 'யேல்' பல்கலையிலிருந்து சில மாணவர்கள், 'முதல்வர் விஜய் குறித்து நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவர் எங்கள் பல்கலைக்கு வந்து உரையாற்ற வேண்டும்' எனவும், 'இ - மெயில்' அனுப்பி, பிரவீன் சக்கரவர்த்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.

'நிச்சயம் முதல்வரை அழைத்து வருகிறேன்' என, பதில் அனுப்பினாராம் பிரவீன். இந்தாண்டு இறுதியில், முதல்வர் விஜய் அமெரிக்கா பயணம் மேற்கொள்வார் என, சொல்லப்படுகிறது. அப்போது, யேல் பல்கலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாம்.

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாதுரை, இந்த பல்கலையில், விசிட்டிங் பெலோஷிப் பெற்றவர். அமெரிக்கர் அல்லாத ஒருவர் இந்த தகுதியை பெற்ற முதல் நபர் அவர் தான். 1968ல் அங்கு அவர் சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us