புலியை சிறை பிடிப்பதில் வனத்துறை அலட்சியம்; ஊழியர்களை கூண்டில் அடைத்த கிராமத்தினர்
புலியை சிறை பிடிப்பதில் வனத்துறை அலட்சியம்; ஊழியர்களை கூண்டில் அடைத்த கிராமத்தினர்
ADDED : செப் 10, 2025 04:12 AM

சாம்ராஜ் நகர் : புலியை சிறை பிடிக்க தாமதமாக வந்த வனத்துறையினரை, கிராம மக்கள் கூண்டில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பொம்மலாபுரா கிராமத்தில், கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வந்தன.
இது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொம்மலாபுரா கிராமத்தில் கங்கப்பா என்பவரின் நிலத்தில், புலியை சிறை பிடிக்க பெரிய கூண்டு அமைத்திருந்தனர்.
கோபம் ஆனால் புலியோ, சிறுத்தையோ சிக்கவில்லை. யானைகள் மூலம் சிறுத்தை, புலியை வனத்தின் உட்பகுதிக்குள் விரட்டவோ, சிறை பிடிக்கவோ முயற்சிக்காததால், கிராமத்தினர் கோபத்தில் இருந்தனர்.
நேற்று காலை கிராமத்தின் எல்லையில் புலியை பார்த்த சிலர், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் சாவகாசமாக அங்கு வந்தனர். அதற்குள் புலி சென்று விட்டது.
இதனால் கோபம்அடை ந்த கிராமத்தினர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 பேரை, புலியை சிறை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் அடைத்து பூட்டினர்.
தகவலறிந்து, குண்டு லுபேட், பண்டிப்பூர் மண்டல வனத்துறை அதிகாரிகள் சுரேஷ், நவீன் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், கிராமத்தினருக்கும் இடையே வாய் வாக்குவாதம் ஏற்பட்டது.
நடவடிக்கை
'இரண்டு மாதங்களாக வன விலங்குகளால் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். புலி குறித்து தகவல் தெரிவித்தும் தாமதமாக வந்தது ஏன்?' என, கிராமத்தினர் கேள்வி எழுப்பினர்.
'புலியை சிறை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, கிராமத்தினரை சமாதானப்படுத்திய அதிகாரிகள், கூ ண்டில் அடைக்கப்பட்டிருந்த வனத்துறையினரை மீட்டு சென்றனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டில் பொம்மலாபுரா கிராமத்தினரால் புலியை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டில், வனத்துறை ஊழியர்கள் சிறை வைக்கப்பட்டனர்.