தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா பந்துவீச்சு தேர்வு
தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட்; இந்தியா பந்துவீச்சு தேர்வு
ADDED : டிச 06, 2025 01:23 PM

விசாகப்பட்டினம்: தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்ல, தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) நடக்க உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டாஸை வென்றுள்ளது. தொடர்ந்து 20 போட்டிகளில் டாஸில் தோற்றது. கடைசியாக 2023ல் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல, தென்னாப்ரிக்காவில் பர்கர் மற்றும் ஜோர்ஷி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரிக்கெல்டன், பார்ட்மன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

