வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்: இன்று வரை 1.53 லட்சம் பேர் மனு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்: இன்று வரை 1.53 லட்சம் பேர் மனு
ADDED : டிச 23, 2025 05:26 PM

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இன்று வரை 1.53 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து, டிச.19ம் தேரித அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் வரைவு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியலானது தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.இதை வாக்காளர்கள் பார்வையிட்டு வரும் சூழலில், அதில் நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர்.
டிச.19ம் தேதி முதல் இன்றைய தினம் வரை பெயர் சேர்ப்புக்கு படிவம் 6 மற்றும் 6 ஏ படிவங்களை நிரப்பி 1 லட்சத்து 53 ஆயிரத்து 571 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து படிவம் 7 ஐ நிரப்பி பேர் மனு அளித்துள்ளனர். இந்த விவரத்தை தமிழக தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

