sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மேற்குக் கரை இணைப்பு மசோதா: இஸ்ரேல் பார்லிமென்டில் ஒப்புதல்

/

மேற்குக் கரை இணைப்பு மசோதா: இஸ்ரேல் பார்லிமென்டில் ஒப்புதல்

மேற்குக் கரை இணைப்பு மசோதா: இஸ்ரேல் பார்லிமென்டில் ஒப்புதல்

மேற்குக் கரை இணைப்பு மசோதா: இஸ்ரேல் பார்லிமென்டில் ஒப்புதல்

2


ADDED : அக் 23, 2025 08:39 PM

Google News

2

ADDED : அக் 23, 2025 08:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம் : ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதிகளை இணைக்கும் மசோதாவை இஸ்ரேல் பார்லிமென்ட் முதற்கட்டமாக அங்கீகரித்துள்ளது.

இந்தியா போன்றே பாலஸ்தீனத்தையும் பல ஆண்டுகளாக பிரிட்டன் ஆட்சி செய்தது. பாலஸ்தீனத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின், ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கி இஸ்ரேல் என்ற தனிநாடு யூதர்களால் தோற்றுவிக்கப்பட்டது. காசா, மேற்கு கரை என இரண்டு முக்கிய நகரங்களை பாலஸ்தீனம் வைத்திருந்தது.

ஆனால் 1967ம் ஆண்டு அரபு நாடுகளின் கூட்டணிக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து, பாலஸ்தீனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தன்வசப்படுத்தியது. இது கிழக்கில் ஜோர்டான் நதியிலிருந்து மேற்கில் மத்திய தரைக் கடல் வரை நீண்டது. போரின் முடிவில், இஸ்ரேல் மேற்குக் கரையின் பெரும்பான்மையான பகுதிகளை ஆக்கிரமித்தது.இதனால் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலுக்கும் தற்போது வரை மோதல் இருந்து கொண்டே இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் -- ஹமாஸ் போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போது, அமெரிக்கா தலையீட்டால் தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது.

இந்த நிலையில், மீண்டும் பிரச்னையை துாண்டும் விதமாக மேற்குக் கரையை தங்கள் நாட்டுடன் இணைக்கும் மசோதா, இஸ்ரேல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'யூதேயா மற்றும் சமாரியாவில் இஸ்ரேலிய இறையாண்மையைப் பயன்படுத்துதல்' என்று குறிப்பிடப்படும் இந்த மசோதா, மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் பார்லிமென்ட் முதற்கட்டமாக இந்த மசோதாகவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

அமெரிக்கா அதிருப்தி!

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இஸ்ரேலில் இருக்கும் நிலையிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த முயற்சிக்கு அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு குந்தகம் விளைவிப்பது போன்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் செயல், காலனித்துவ ஆக்கிரமிப்பின் அசிங்கமான முகத்தை பிரதிபலிக்கிறது என்று ஹமாஸ் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேற்குக் கரை நிலங்களை இணைக்கும் முயற்சி பலிக்காது என்றும், மேற்குக் கரை பாலஸ்தீன பிரதேசம் என்ற உண்மையை மாற்றாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us