sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!

/

தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!

தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!

தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? கேள்விகளை அடுக்கிய திருமா!


ADDED : அக் 02, 2025 12:43 PM

Google News

ADDED : அக் 02, 2025 12:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம்? என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கரூர் சம்பவத்தில் தமிழக போலீசார் காட்டும் மெத்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏன் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ய என்ன முகாந்திரம் இருக்கிறது. அந்த முகாந்திரம் விஜய்க்கு இல்லையா? ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை? தமிழக அரசு அச்சப்படுகிறதா?

தமிழக காவல்துறை அச்சப்படுகிறதா? அல்லது வலுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு போடுவதில்லை, இளைத்தவர்கள் மீது தான் வழக்குப்பதிவு போடுவது என்கிற நடைமுறையை கையாள்கிறதா? 15, 20 வருடங்களுக்கு முன், நான் நயினார் பாளையம் என்ற இடத்தில் நான் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறேன். புதுச்சேரி அருகில் ஒரு சம்பவம் நடக்கிறது அன்றைக்கு விழுப்புரம் எஸ்பியாக இருந்த ரவி என் மீது வழக்கு போட்டார்.

எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு தெரியாத ஒரு நிகழ்வு. கட்சிக்காரர்கள் ஏதோ ஒரு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உடன் சம்மந்தமே இல்லாத என் மீது பல வழக்குகளை எந்த தொடர்பும் இல்லாத நிலையில் போடப்பட்டு இருக்கிறது. காவல்துறையின் இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. எதற்காக அச்சப்படுகிறார்கள்? யாருக்காக அச்சப்படுகிறார்கள்.

எல்லோரும் சமம் என்று பார்க்கிற போது அந்த கட்சியில் சம்மந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள், அலட்சியமாக இருந்தவர்கள், இந்த உயிரிழப்பிற்கு காரணமான நிலைப்பாட்டை எடுத்தவர்கள், கால தாமதம் செய்தவர்கள் என்கிற வரிசையில் நடிகர் விஜயும் தானே வருகிறார். அவர் மீது வழக்கு தொடுப்பதற்கு தமிழக அரசுக்கு என்ன தயக்கம், என்ன அச்சம், இந்த அணுகுமுறை ஏற்புடையது அல்ல. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.






      Dinamalar
      Follow us