தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/2027 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் சிம் இல்லாமல் செயல்படாது: யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

2027 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் சிம் இல்லாமல் செயல்படாது: யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

2027 முதல் வாட்ஸ்அப், டெலிகிராம் சிம் இல்லாமல் செயல்படாது: யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

4


ADDED : அக் 23, 2026 10:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 10:05 PM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

2027ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செல்போன்களில் சிம் கார்டுகளை அகற்றினால் டெலிகிராம், வாட்ஸ்அப் செயலிகள் வேலை செய்யாது; சட்ட விரோதச் செயல்கள், இணையவழி மோசடிகள், சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் வை பை வசதியுடன் செயலிகளை பயன்படுத்துவதை தடுக்க

மத்திய தொலைத்தொடர்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பலர் தங்களது பழைய போன்களில் சிம் கார்டை கழற்றிவிட்டு, வெறும் வை பை இணைப்பை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்அப் அல்லது டெலிகிராமை இயக்கி வருவார்கள். இனிமேல் சிம் கார்டு சாதனத்தில் இல்லை என்றால், ஆப் தானாகவே முடக்கப்படும். முதன்மை போனில் சிம் கார்டை வைத்துக்கொண்டு, மற்றொரு போனில் அதே எண்ணைக் கொண்டு வாட்ஸ்அப் லாகின் செய்து பயன்படுத்துபவர்கள் பாதிக்கப் படுவார்கள். சிம் கார்டு இருக்க வேண்டியது கட்டாயம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அல்லது உள்ளூரில் அடிக்கடி சிம் கார்டுகளை மாற்றிப் பயன்படுத்துபவர்கள், தங்களுடைய பதிவு செய்யப்பட்ட அசல் சிம் கார்டை போனில் இருந்து அகற்றிவிட்டால் ஆப் வேலை செய்யாது. வாட்ஸ்அப் கணக்கைத் தொடங்குவதற்காக ஒரு எண்ணைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் அதற்கு ரீசார்ஜ் செய்யாமல் சிம் கார்டை செயலிழக்க செய்திருந்தால் அந்த கணக்குகள் முடக்கப்படும்.

கணினி அல்லது லேப்டாப்பில் நீண்ட நேரம் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துபவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் டிக்கடி லாக் அவுட் செய்யப்படுவார்கள். மீண்டும் லாகின் செய்ய சிம் கார்டு இருக்கும் போனில் இருந்து க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும்.

மத்திய அரசின் இந்த உத்தரவு வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை , ஜியோசாட் , ஷேர்சாட் போன்ற மொபைல் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அனைத்து முக்கிய குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடக செயலிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டு இல்லாமல் வை பை மூலம் மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துபவர்களே புதிய மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். மோசடி செய்பவர்கள் இந்திய எண்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கடினமாக்கும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us