நடுவானில் பிரச்னை என்றால் யார் காப்பாற்றுவார்கள்? கேப்டன் சுமித் மச்சார் பேசிய பழைய வீடியோ வைரல்
நடுவானில் பிரச்னை என்றால் யார் காப்பாற்றுவார்கள்? கேப்டன் சுமித் மச்சார் பேசிய பழைய வீடியோ வைரல்
ADDED : அக் 01, 2026 05:36 PM

புதுடில்லி: 'நடுவானில் பிரச்னை என்றால் யார் காப்பாற்றுவார்கள்' என கேட்கும் இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சாரின் பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
பிளை துபாய் விமானியான கேப்டன் சுமித் மச்சார், தன் வீரதீரச் செயலால், பயணிகள் 174 பேரை காப்பாற்றினார். அவர் அளித்த பழைய பேட்டி வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் சுமித் மச்சார் கூறி இருப்பதாவது: நாம் மேலே பறக்கும்போது ஏதேனும் விபரீதம் நடந்தால் நம்மை யார் காப்பாற்றுவார்கள்? அந்த நேரத்தில் விமானத்தில் ஒரு டாக்டர் பயணித்தால் மட்டுமே நாம் அதிர்ஷ்டசாலிகள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியும்.
பயணிகள் பெரும்பாலும் விமானப் பணிப்பெண்களை சாதாரணமானவர்களாகப் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு அவசரநிலை வரும்போது தான் அவர்களின் உண்மையான முக்கியத்துவம் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தற்போது நிஜமாகவே இவருக்கு கத்திகுத்து ஏற்பட்டபோது அந்த விமானத்தில் இருந்த ஒரு இஸ்ரேலிய பல் டாக்டர் ஷோட்டா முசாவேவ் இவருக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
தற்போது காயமடைந்த சுமித் மச்சார் சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் உள்ளார். ஆபத்தான நிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்ட இவரைப் பலரும் சமூக வலைதளங்களில் 'உண்மையான ஹீரோ' என்று பாராட்டி இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
