UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 05:14 PM
பாகூர்: மனநிலை பாதிக்கப்பட்ட பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் வாழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மோகன் 55; இவரது மனைவி பத்மாவதி 51; இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் இருந்தார். கடந்த 29ம் தேதி, பத்மாவதியை அவரது குடும்பத்தினர், ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு துாங்கி உள்ளனர். மோகன், காலை 6.30 மணிக்கு பார்த்தபோது, அவரது மனைவி பத்மாவதி, அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் நைலான் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்
தகவலறிந்த பாகூர் போலீசார் பத்மாவதி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
